MGR Katturai in Tamil | எம் ஜி ஆர் கட்டுரை

எம் ஜி இராமச்சந்திரன் எனப்படும் எம் ஜி ஆர் தமிழகத்தில் அரும்பணிகள் ஆற்றிய தன்னிகரில்லாத தலைவர். மக்கள் திலகம் என்று போற்றப்பட்ட எம் ஜி ஆர் சினிமாவில் புகழ் பெற்று பிறகு அரசியலில் ஈடுபட்டார். இவர் சினிமாவில் ஏற்று நடித்த குணசித்திர வேடங்கள் இவருக்கு மக்களிடையே அதிக செல்வாக்கினை ஏற்படுத்தி தந்தன. இதனால் இவர் எளிதாக தமிழகத்தின் முதலமைச்சர் என்ற உயரிய நிலைக்கு உயர முடிந்தது.

எம்ஜிஆர் இலங்கையில் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் கோபாலன் மேனன் – சத்யபாமா தம்பதியருக்கு 5 வது மகனாகப் பிறந்தார். தனது தாயாரை தொடர்ந்து எம் ஜி ஆர் சினிமாவில் நுழைந்தார். 1936 இல் சதி லீலாவதி என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை உலகப் பயணத்தை தொடங்கி காவல்காரன், ரிக்ஷக்காரன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், உலகம் சுற்றும் வாலிபன், நாடோடி மன்னன் ஆகிய வெற்றிப்படங்களில் நடித்தார்.

1972-இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியில் சேர்ந்து, படிப்படியாக கட்சியின் உயர் பதவிகளை ஏற்றார். 1977 இல் நடந்த தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்று தமிழகத்தின் முதல்வரானார். 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை அலங்கரித்து, இவர் பதவியிலிருந்த போதே உயிர் துறந்தார். இவரது மறைவுக்குப் பிறகு அவருக்கு பாரத ரத்னா என்ற இந்தியாவின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இவரது ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட சில அருமையான திட்டங்கள் பின்வருமாறு.

சத்துணவுத் திட்டம்

விதவை ஆதரவற்ற பெண்களுக்குத் திருமண உதவி

மகளிருக்கு சேவை நிலையங்கள்

பணிபுரியும் பெண்களுக்குத் தங்கும் விடுதிகள்

தாய் சேய் நல இல்லங்கள்

இலவச சீருடை வழங்குதல் திட்டம்

இலவச காலணி வழங்குதல் திட்டம்

இலவச பற்பொடி வழங்குதல் திட்டம்

இலவச பாடநூல் வழங்குதல் திட்டம்

வறட்சிக் காலத்தில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்குகின்ற திட்டம்.

மக்கள் திலகம் என்ற பெயருக்கு இலக்கணமாக திகழ்ந்து, அரசியல், ஆட்சி, சினிமா மற்றும் சமுதாயத்தில் எம் ஜி ஆர் அவர்கள் ஆற்றிய பணிகள் அளப்பரியவை.

MGR Essay in Tamil

MGR, also popularly known as MG Ramachandran, is one of the greatest leaders in Tamil Nadu. MGR became popular as Makkal Tilagam meaning, the gem among people. He became famous in cinema and later got involved in politics. The characters he adopted in cinema gave him much influence on the people. Thus he was easily able to rise to the high position of Chief Minister of Tamil Nadu.

MGR was born in Nawalapiti near Kandy in Sri Lanka as the 5th son of Gopalan Menon and Satyabhama. Following his mother, MGR entered the cinema. He started his screen career with the film Sathi Lilavati in 1936 and starred in the hit films Kavalkaran, Rikshakkaran, Maduraiyai Meetta Sundara Pandiyan, Nadodi Mannan, Ulagam Sutrum Valiban, and others.

He joined the Anna Dravida Munnetra Kazhagam (ADMK) in 1972 and gradually rose to the top of the party. He won a landslide victory in the 1977 elections and became the Chief Minister of Tamil Nadu. He held the post of Chief Minister for 10 consecutive years till 1987 and passed away during his tenure. After his death, he was honored with the highest award of India, the Bharat Ratna.

The following are some of the wonderful projects that took place during his reign.

Free Midday meals

Marriage assistance to widowed orphans

Service stations for women

Hostels for working women

Mother-Child Nursing Homes

Free uniform distribution scheme

The free shoe distribution program

The free toothpowder distribution program

The free textbook distribution program

Project to provide drinking water by lorries during drought.

The name Makkal Tilakam highly suits this personality who has accomplished several great feats in politics, governance, cinema, and society at large. Through his tremendous contribution to Tamil Nadu, he has become an immortal name in the hearts of the Tamil people.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.