Naan Maruthuvar Aanal Tamil Katturai | நான் மருத்துவர் ஆனால் – கட்டுரை

வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு லட்சியம் அல்லது கனவு உள்ளது. இந்த கனவினை நோக்கியே நமது வாழ்க்கைப் பயணம் அமைகிறது. எனது லட்சியம் மற்றும் கனவு யாதெனின் ஒரு சிறந்த மருத்துவராகி இந்த மனித குலத்திற்கும் உலகில் உள்ள ஜீவராசிகளுக்கும் சேவை செய்வதுதான். நான் இளம் வயதிலிருந்தே இந்த சிந்தனையை வளர்த்துக் கொள்ளக் காரணம் எனது தாயார் மற்றும் தகப்பனார். இவர்களிருவரும் ஒரு சமுதாய சேவை செய்யும் அமைப்பில் ஈடுபட்டு தமது வாழ்க்கையை சமூக சேவைக்கு அர்பணித்தவர்களாவர். இந்த சேவை மனப்பான்மையை என்னிடமும் விதைத்தவர்கள் இவர்களே. இத்தகைய பெற்றோரைப் பெற்றதை எனது பெரும் பாக்கியமாக நான் கருதுகிறேன்.

மருத்துவர் ஆவது எளிதான காரியம் இல்லை என்று எனக்கு தெரியும். நான் மிகவும் கடினமாக உழைத்து மருத்துவக் கல்லூரியில் இடத்தைப் பெறுவேன். இந்த முயற்சிக்காக இரவும் பகலும் கடின உழைப்பினை செய்வதற்கு நான் தயார். என் குடும்பம் ஒரு நடுத்தர வர்கத்தை சேர்ந்த குடும்பம். எனது பெற்றோரால் பல லட்சங்கள் செலவு செய்து மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித்தர முடியாது. எனவே நான் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி தகுதி நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதன் மூலம் தகுதி அடிப்படையில் இலவச இடத்தைப் பெறுவேன்.

நான் மருத்துவர் ஆன பின்னால் ஒரு இலவச மருத்துவமனையை எனது கிராமத்தில் கட்டுவேன். நான் நகர்புறத்தில் அமைந்த பல முன்னணி மருத்துவமனைகளில் பணி புரிந்து சம்பாதிப்பதை ஒரு பக்கம் செய்தாலும் மறுபக்கம் எனது கிராம மக்களுக்கு இலவச மருத்துவ உதவிகளை என்றும் செய்வேன். எனது கனவினை நனவாக்க நான் இரவும் பகலும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

நான் மருத்துவரானால் நீங்கள் என்றும் என்னை தேடி எனது மருத்துவமனைக்கு வரலாம். உங்களுக்கும் நான் பல சிறந்த மருத்துவ ஆலோசனைகளை இலவசமாகவோ, குறைந்த கட்டணத்திலோ வழங்கக் காத்திருக்கிறேன். என்ன! எனது மருத்துவமனையில் விரைவில் சந்திப்போமா?

If I Become A Doctor – Tamil Essay

Everyone in life has an ambition, also called as a dream. Our life’s journey is set towards achieving this cherished dream. My ambition and dream is to become a good doctor and serve this human race and the other living beings in the world. My mother and father are the most powerful inspiration for me who have nurtured this thought in me right from my young age. Both my parents are involved in a community service organization and have dedicated their lives to community service. They are the ones who planted this service mindset in me too. I consider it my great privilege to have such parents.

I know that becoming a doctor is not an easy task. I will work very hard and get a place in medical college. I am prepared to work hard day and night for this to realize in my life. My family is a middle-class family. My parents cannot afford to spend millions to get a place in medical college. So I will focus on my studies and get a free place on a merit basis by getting high marks in the qualifying entrance exam.

I will build a free hospital in my village after I became a doctor. On the one hand, I will work and earn money at many leading hospitals located in the city but on the other hand, I will do free medical care for my villagers. I pray to the Lord day and night that my dream comes true.

When I become a doctor, you can always come to my hospital for any of your medical requirements. I eagerly look forward to providing you with much excellent medical advice for free or at a low cost. What next! See you soon at my hospital!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.