Muyarchi Vetri Tharum Katturai In Tamil | முயற்சி வெற்றி தரும் கட்டுரை

முயற்சி என்பது மனிதர்களுக்கு ஒரு மிக முக்கியமான குணமாகும். மனித வாழ்க்கையில் உயரிய பல சாதனைகளை செய்வதற்கு முயற்சி அவசியம். நாம் வாழ்க்கையில் அடைய விரும்பும் லட்சியங்களை அடைய முயற்சி இல்லையெனில் முடியாது. முயற்சி திருவினையாக்கும் என்று சொல்வார்கள். முயற்சி எப்போதும் வீண் போகாது. முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார் என்றும் கூறுவர். எவன் ஒருவன் கடினமான முயற்சியை முதலீடாகப் போடுகிறானோ அவன் எந்த ஒரு இகழ்ச்சியையும் சந்திக்க நேராது என்பது இதன் பொருள்.

திருவள்ளுவர் திருக்குறளில் “தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்” என்று கூறுகிறார். இதன் பொருள் என்னவென்றால், முயற்சி செய்வதன் மூலம் தெய்வத்திற்கே இயலாத காரியத்தைக் கூட ஒருவன் செய்து முடிக்க இயலும் என்பதுதான். முயற்சிக்கு முதல் தடைக்கல் சோம்பேறித்தனம். இரண்டாவது தடைக்கல் தொடர்ச்சியான செயல்பாடு இல்லாமை. இவை இரண்டையும் நாம் நீக்கி முயற்சியை வளர்த்துக் கொள்ளும்போது உயர்வு தானாக நம்மைத் தேடி வரும்.

இளம் வயதில் முயற்சி மிகவும் முக்கியமான குணமாகும். நாம் முயன்று படிக்கும்போது அறிவு மேம்படுகிறது. நாம் முயன்று பல ஆற்றல்களையும் திறன்களையும் வளர்த்துக் கொள்வதன் மூலம் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கிறது. முயற்சியால் உயர்ந்த ஒருவனை இந்த உலகம் பாராட்டும். முயற்சி உடையோரிடமே பொருள் சேரும், உடல் நலமும் மன நலனும் மேலோங்கும். முயற்சியால் மனிதன் இந்த சமுதாய வாழ்க்கையில் மட்டுமின்றி ஆன்மீக வாழ்க்கையிலும் முன்னேற இயலும்.

போரில் தோல்வியுற்று காட்டில் பதுங்கி இருந்த ஒரு மன்னன் அங்கு ஒரு சிலந்தியைக் காணுகிறான். அந்த சிலந்தி ஒரு வலையைப் பின்னிக்கொண்டிருந்தது. பல முறை கீழே விழுந்த போதும் தனது முயற்சியைக் கைவிடாமல் அது இறுதியாக வலையைக் கட்டி முடித்தது. இதைக் கண்ட மன்னன் தானும் அத்தகைய முயற்சியை வளர்த்துக் கொண்டு இறுதியில் மாபெரும் வெற்றியைக் கண்டான்.

முயற்சி செய்து வாழ்வில் பல வெற்றிகள் காணுவோமாக.

Effort Will Give Success – Essay

Effort is a very important virtue for human beings. It takes effort to make many achievements that are lofty in human life. Trying to land on the goals we want to achieve in life is otherwise impossible. They say “Effort always gives the best results”. No sincere effort can go in vain. It is also said, “He who puts in a lot of effort will never have face any humiliation in life.” This means that he who invests in hard work will always land on the desired results, also setting an example for others in life.

Thiruvalluvar says in Thirukural that “Effort can achieve those things that even God cannot achieve”. This means is that by effort one can accomplish anything in life. The first obstacle to attempt is laziness. The second barrier is the lack of continuous activity. When we escape from these deterrents and cultivate good effort, we can achieve great heights.

Putting efforts at a young age is the most important criterion for growth and development. Knowledge improves as we seek and study. Success in life comes when we strive to develop many talents, abilities, and skills. This world will appreciate someone who is superior by effort. Wealth comes only to a person who puts in a lot of effort. Such a man also lands on physical and mental well-being. Through effort, man can progress not only in this social life but also in the spiritual life.

A king who was defeated in battle and hid in the forest finds a spider there. The spider was weaving a web. It finally ended up completely weaving a massive net without giving up its attempt despite falling down several times. Seeing this, the king himself developed such an endeavor and eventually saw great success.

Let’s try and see many successes in life.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.