Gandhi Adigal Katturai in Tamil

காந்தி அடிகள் – கட்டுரை


இந்தியாவின் தந்தை என்று அன்புடன் அழைக்கப்படும் அண்ணல் காந்தி அடிகளை பற்றி அறியாத இந்தியர் எவரும் இருக்க முடியாது. அண்ணல் காந்தி அடிகள் யார்? இவர் இந்திய தேசத்திற்கு ஆற்றிய பணி என்ன? என் அவரை நாம் மகாத்மா என்று போற்றுகிறோம் – என்ற வினாக்களுக்கு விடைகளை இந்தக் கட்டுரையில் காண்போம்.

காந்தி அடிகள்


தேசப்பிதா என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் அண்ணல் காந்தி அடிகள் இந்திய வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் உருவாகக் காரணமாக இருந்தார். ஆங்கில ஆதிக்கத்தின் கீழ் அடிமைப் பட்டிருந்த நாட்டின் விடுதலை இயக்கத்திற்குப் புத்துயிர் ஊட்டி இந்தியா சுதந்திரம் பெற காந்தி அடிகள் செய்த பணி மகத்தானது.

1869 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாம் நாள் காந்தி அடிகள் குஜராத் மாநிலத்தின் போர்பந்தர் என்னும் ஊரில் புத்திலிபாய் அம்மையாருக்கும் கரம்சந்த் உத்தம்சந்த் காந்திக்கும் மகனாகப் பிறந்தார். அவரது தாயார் அவருக்கு சிறு வயது முதலே பல சான்றோரது கதைகளைக் கூறி ஊக்கப் படுத்தியதால் வளரும் பருவத்திலேயே காந்தி ஒரு சத்தியவானாக வளர்ந்தார்.

தென் ஆப்பிரிக்காவில் சில ஆண்டுகள் காந்தி வாழ்ந்த போது அங்கு நடந்த இனவெறி தாக்குதல்கள் மற்றும் பாகுபாடுகளை அகிம்சை முறையில் எதிர்த்தார். தென் ஆப்பிரிக்க அனுபவம் காந்திஜிக்கு ஒரு புதிய உத்வேகம் அளிக்க, அகிம்சை ஆயுதம் அவருக்கு இந்தியாவிலும் உபயோகமானது.

1915 ஆம் ஆண்டு காந்தி அடிகள் இந்தியா திரும்பி இந்திய சுதந்திர போரை சீரிய முறையில் வழி நடத்தினார். 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா சுதந்திரம் அடைந்தது.

காந்தி அடிகள் அன்பே உருவான அகிம்சையாளர். பகைவரையும் நேசிக்கும் இனிய அன்பினையும் எந்த நிலையிலும் தவறாத உண்மையையும் நாம் அவரிடம் காணுகிறோம். இந்து – முஸ்லீம் ஒற்றுமைக்கு காந்தி அடிகள் செய்த பணிகள் அளப்பரியவை.

காந்தி அடிகள் சுதந்திர இந்தியாவில் ஒரு பதவியையும் கோராமல் தனது அன்பு, தியாகம் மற்றும் உண்மையை என்றும் மக்கள் மறவாத வண்ணம் விட்டுச் சென்றார். 1948 ஆம் ஆண்டு ஜனவரி
மாதம் 30 ஆம் நாள் காந்தி அடிகள் படுகொலை செய்யப்பட்டார்.

இந்திய வரலாற்றில் காந்தி அடிகளின் மாபெரும் பணி என்றும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் பட்டிருக்கும். இந்த தேசத்தின் பணியில் தனது வாழ்க்கையையும் உயிரையும் தியாகம் செய்த அண்ணல் காந்தி அடிகள் இந்த உலகம் போற்றும் உன்னதமான மகாத்மாவாக இன்றும் நமது இதயங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

Gandhi Adigal (Gandhiji)

Lovingly called as The Father of the Nation, Gandhiji was instrumental in bringing a new epoch in Indian history. He gave new life and momentum to freedom struggle in India and did a phenomenal work in securing freedom to India from the British rule.

Gandhiji was born in Gujarat in a place called Porbandar in 1869 in the family of Puthlibai and Karamchand Uthamchand Gandhi. From his tender age, Gandhi was nurtured by his mother with the stories of great men and women which infused the concept of Truth in him. During his few years of stay in South Africa, Gandhi opposed the racial discrimination that prevailed there in a non-violent fashion. The weapon of non-violence was useful to him on his return to India.

Gandhiji returned to India in 1915 and gave a fitting leadership to the Indian Freedom struggle. India got independence on August 15, 1947. Gandhiji’s personality was made of love and non-violence. He loved even his enemies. His truth was unfailing under all circumstances. His contribution to Hindu – Muslim unity was marvelous. In free India, Gandhiji never sought any position in the government. He left back his love, sacrifice and truth in the hearts of the Indians. On January 30, 1948, Gandhiji was assassinated.

Gandhiji’s great work will ever be found etched in golden letters in the history of India. Gandhiji sacrificed his life in the service of the nation. Gandhiji is ever immortal in our hearts as a noble soul praised by the whole world.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.