எரிபொருள் சேமிப்பு கட்டுரை
நாம் இந்த உலகில் வாழ்வதற்கு பலவிதமான ஆற்றல்கள் நமக்கு உதவுகின்றன. எரிபொருட்கள் அவற்றில் மிக முக்கியமானவை. நாம் பலவிதமான எரிபொருட்களை உபயோகிக்கிறோம். நாமும், நமது சந்ததியினரும் இந்த உலகமும் நலமோடு நீடு வாழவேண்டும் என்றால் நாம் எரி பொருள் சேமிப்பின் அவசியத்தை உணர்ந்து அதற்கான நமது பங்களிப்பினை தவறாது செய்ய வேண்டும். எரிபொருள் சேமிப்பின் அவசியத்தைப் பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம்.
எரிபொருள் சேமிப்பு கட்டுரை
பெரும்பாலான எரிபொருட்கள் அவை எரியும்போது கார்பனை காற்றில் சேர்க்கின்றன. இது சுற்றுப்புறம் மாசுபடக் காரணமாக அமைகிறது. அது மட்டுமல்லாமல் பல எரிபொருட்கள் ஒரு முறை உபயோகிப்பதால் தீர்ந்து விடக்கூடியவை. இவற்றை நாம் மரங்களிலிருந்து, பூமிக்கு அடியிலிருக்கும் கனிமங்களிலிருந்தும்தான் பெறுகிறோம். அதனால் நாம் உபயோகிக்கும்போது அவை தீர்ந்து போய் பிற்கால சந்ததியினருக்கு அவை கிடைக்காமல் போகலாம். எனவே எரிபொருள் சேமிப்பு மிகவும் அவசியம்.
இங்கு நாம் இரண்டு விதமான எரிபொருட்களை எப்படி சேமிப்பது என்று பார்ப்போம். முதலில் நம் வீடுகளில் சமைக்க உதவும் சமையல் எரிவாயு. அடுத்தது நாம் வாகனங்களுக்கு உபயோகிக்கும் பெட்ரோல் அல்லது டீசல்.
சமைக்கும்போது குறைந்த தீ சுவாலையில் சமைக்க வேண்டும் இதனால் சமைக்கும் பண்டங்களின் சுவை கூடுவது மட்டுமில்லாமல் எரிபொருளை சேமிக்க வழி ஏற்படும். சரியான திட்டமிடல் மூலமாக நாம் பல சமையல் வேலைகளை ஒன்றாக இணைத்து எரிபொருளை சேமிக்க இயலும்.
வாகனங்களை முடிந்தவரை அளவோடு பயன்படுத்த வேண்டும். அனாவசியமான பயணங்களை தவிர்ப்பது, சிக்னல்களில் வாகனங்களின் என்ஜினை அணைப்பது, டயரின் காற்று அழுத்தத்தை அவ்வப்போது சரி செய்துகொள்வது ஆகியன வாகனங்களில் எரிபொருளை சேமிப்பதற்கு வழிகள்.
எரிபொருளை நாம் சேமிப்பதன் மூலம் நாமும் நமது சந்ததியினரும் நல் வாழ்வு வாழ முடியும். எனவே இந்தப் பொறுப்பை நாம் மிக முக்கியமானதாகக் கருத வேண்டும்.
Conservation of fuels Essay
A number of energies help us to run our life on this earth. Fuels are very important ones among them. We use different kinds of fuels. If we, our world and next generations must live well for a long time without problems and hassles, it is necessary that we focus on conserving the fuels we use in our daily lives. To this end, we must be prepared to make our contribution. Let us learn about the importance of conserving fuels.
A majority of fuels give out carbon when they burn. This leads to pollution of air. Also, several types of fuels are used up and disappear once they are burnt. We obtain such fuels from trees and from the underground minerals. When we use these fuels, they will be used up and their sources will disappear very soon. Hence conservation of fuels is a very important topic.
In this essay, let us learn how to conserve two types of fuels. The first one is the domestic gas we use in our homes for cooking. The next one is the petrol or diesel that power our vehicles.
While cooking, we must cook in medium or low flame. This will lead to saving of fuel. In this way, the taste of the preparations will also increase. If we plan the cooking process properly, we can save on the fuel in an innovative way.
We must use the vehicles with discrimination. We must avoid unnecessary travels. Measures like switching off the engines at signals, and checking the tire air pressure can help save fuels.
By conserving fuels, we and our succeeding generations can live a good life. Hence we must focus on this topic and act in a responsible way.