Ennai Patri Katturai in Tamil

என்னைப் பற்றி கட்டுரை

நான் இதுவரை எத்தனையோ தலைப்புகளில் கட்டுரை எழுதியுள்ளேன். ஆயினும் என்னைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுவது இதுதான் முதல்முறை. எனவே என்னைப் பற்றி எழுதவேண்டும் என்று நினைக்கும்போதே என்னுள்ளிருந்து ஒரு புதிய உற்சாகம் பிறக்கிறது. இதோ என்னைப் பற்றிய கட்டுரை.

என்னைப் பற்றி கட்டுரை

நான் பிறப்பால் ஒரு மனிதன் என்று உணர்கிறேன். ஒளவையார் கூறியது என் நினைவுக்கு வருகிறது. மனிதப் பிறப்பு எத்தனை உயர்வானது என்று கூறும்போது அவர் சொல்கிறார், “அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது. அதனினும் கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது.” எங்கிறார். ஆம்! இந்த மண்ணில் மனிதனாய்ப் பிறந்து ஊனம் ஏதுமின்றி தகுதியான மனதோடும் உடல் ஆரோக்கியத்தோடும் இருக்கும் எனது நாள் பாக்கியத்தை எண்ணி முதலில் பெருமை அடைகிறேன். இறைவனுக்கு இதற்காக எனது நன்றியைக் கூறுகிறேன்.

எனக்கு வாய்த்த பெற்றோரும் குடும்பமும் நான் பல வகைகளில் எண்ணிப் பெருமை அடையும் வகையில் அமைந்துள்ளன. எனது தாய் தந்தையர் எனது நலனில் மிகவும் அக்கறை கொண்டு என்னைப் பேணி வளர்க்கின்றனர். எனது தாயும் தந்தையும் எனக்கு சிறந்த நண்பர்கள் கூட. ஒரு குடும்பமாக நாங்கள் ஒரு சண்டை சச்சரவும் இன்றி அன்போடும் அமைதியோடயும் வாழுகிறோம். இது எனக்கு கிடைத்த இரண்டாவது வரம்.

அடுத்ததாக நான் பிறந்த இந்த பாரத மண். இந்தியனாகப் பிறப்பதற்கு நான் மிகப் பெரும் அருந்தவம் செய்திருக்க வேண்டும் என்று உணர்கிறேன். உலகின் மிக தொன்மையான மற்றும் சிறப்பான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பெற்றிருப்பதை எண்ணி உள்ளம் பூரிக்கிறேன்.

இவ்வாறு இறைவன் என்னை சுற்றி அமைந்த எல்லாவற்றையும் மிக சிறப்பானதாக அமைத்துள்ளார். என்னையும் சிறப்பாகப் படைத்துள்ளார். இனி நான் என் கடமையை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற பொறுப்பினை உணர்ந்து என் வாழ்க்கைப் பயணத்தை நான் ஆரவாரமின்றி அமைதியாகவும், உறுதியாகவும் தொடர்கிறேன்.

An Essay About Me

I have written essays on various topics. However, this is the first time I am writing an essay about me. The moment I think I am going to write about me, a new enthusiasm bubbles forth from inside me. Here is an essay about me.

I understand that I am a human by birth. I am reminded of Avvaiyar who said, “It is indeed a very rare thing to have been born as a human. Rarer still is the fact that we are born without any disabilities whatsoever.” Yes! Having born as a human being on this earth without any disabilities, with a sound body and fit mind makes me proud> I convey my thanks to the almighty for this blessing.

The parents and family I have got make me feel proud in several ways. My parents are highly focused on my welfare and happiness. They are indeed my good friends also. As a family we conduct our lives happily without any problems and quarrels in a peaceful and happy manner. This is the second blessing I have got.

The next thing is the noble land on which I have got my birth. I am highly proud of having been born as an Indian. I must have done a big penance to have been blessed in this way. I am doubly proud that I inherit one of the best and the oldest civilizations on this earth.

In this way, God has made everything around me so wonderful. I have also been given a birth that is so good. Hence now I realize that I need to discharge my duties in the right way reflecting on my responsibilities towards myself, my family, my country and the humanity. With this awareness, I am continuing my journey in a silent, resolute and peaceful manner.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.