Thanneer Katturai in Tamil

தண்ணீர் கட்டுரை

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் நீரின்றி அமையாது உலகுஎன்று இயம்பினார். இந்த உலகில் உயிர்கள் வாழ நீர் அவசியம். தாவரங்களானாலும் விலங்குகளானாலும் தண்ணீர் இல்லாமல் உயிர் வாழ இயலாது. தண்ணீரின் முக்கியத்துவத்தை இந்தக் கட்டுரையில் காண்போம்.

தண்ணீர் கட்டுரை

மனித உடலில் 50 சதவிகிதத்திற்கும் மேலாக நீரே உள்ளது. தாவரங்களின் எடையில் 90 சதவிகிதத்திற்கும் மேல் நீர் உள்ளது. உயிர்கள் இந்த உலகில் வாழவும் வளரவும் பல்கிப்பெருகவும் நீர் மிக முக்கியமான காரணியாக உள்ளது.

இந்த உலகில் 79 சதவிகிதம் நீர் இருந்தாலும் அதில் 97.50 சதவிகிதம் கடல் நீராகவே உள்ளது. எனவே நாம் குடிநீருக்காக நிலத்தடி நீர் மற்றும் ஆறு குளம் குட்டைகளையே நம்பி வாழ வேண்டியுள்ளது. விவசாயம், பெருகிவரும் மக்கள் தொகை மற்றும் தொழில்களின் வளர்ச்சியினால் நாம் நுகரக் கூடிய நீரின் அளவும் கணிசமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டியது மிக அவசியம்.

மனிதரின் பலவகையிலான செயல்பாடுகளால் நீர்நிலைகள் சரியாக மேலாண்மை செய்யப்படுவதில்லை. இதனால் நீர் மாசுபட்டு நாம் உபயோகிக்க இயலாத வகையில் சீரழிந்து வருகிறது. மேலும், நிலத்தடி நீரை நாம் வரையறை இல்லாமல் இயந்திரங்களைக் கொண்டு உறிஞ்சிவிடுவதால் நிலத்தடி நீரின் மட்டமும் மிக வேகமாகக் குறைந்து வருகிறது. இந்த உலகில் உயிர்கள் வாழ வேண்டுமெனில் நீர் மேலாண்மையை செம்மைப் படுத்தி நீர் சேமிப்பையும் பெருக்கி, மழை பெருக நம்மாலியன்ற முயற்சிகளை உடனடியாக செய்தல் அவசியம்.

ஆறு, குளம், ஏரி இவற்றை நாம் தூய்மையும் ஆழமும் படுத்தி மழை நீரை முறையாக சேமிக்க முயற்சி எடுக்க வேண்டும். நீர்நிலைகள் மாசுபடுவதை தடுத்து நீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். மறு சுழற்சி முறையில் நீரின் உபயோகத்தை முறைப்படுத்தி நீரை சேமிக்கலாம். நீர் சேமிப்பு ஒவ்வொரு மனிதரிடமிருந்து வீட்டிலிருந்தும் ஆரம்பிக்க வேண்டும்.

மரங்களை வளர்க்க வேண்டும், புவி வெப்பமடைவதை தடுத்தால் மழை வளம் பெருகும். பலநாடுகளில் குடிக்கக் கூட நீர் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்கெனவே உருவாகிவிட்டது. இந்த நிலை மற்ற நாடுகளுக்கும் பரவும் முன்னர் நாம் பலவகைகளில் முயன்று செயல்பட்டு தண்ணீரை சேமிக்கவும், மழையைப் பெருக்கவும் வழி செய்ய வேண்டும். இதனை நாம் உடனடியாக செய்யாவிட்டால் நீர் இல்லாமல் நாமும் நமது பின்வரும் சந்ததியினரும் சொல்லொணா துன்பங்களுக்கு உள்ளாக நேரும்.

Thanner Katturai–Water Essay

Two thousand years back, the most renowned Tamil poet Thiruvalluvar said, “The world cannot go on without water”. For plants and animals to live on this earth, water is very much essential. Let us look at the importance of water in this essay.

Over 50% of the human body is made of water. More than 90% of plant mass is water only. For lives to live on this earth, water is the primary requisite.

Though the earth has 79% of water, over 97.50% of it is seawater. Hence for drinking and other uses, we need to depend on the water sources found on land and underground. The proliferation of agriculture, industries, and population demands more water. Hence we must use water sparingly and save it for future use.

Due to improper water management practices, the inland water sources are nor maintained properly. Hence most of the water available inland is becoming unusable. Also, the underground water is recklessly drawn leading to the depletion of water beds. For the lives to continue on this earth, we need to improve the water management practices and take steps to increase the rains.

We must take steps to clean and deepen the lakes, rivers, and other inland water sources. We must prevent water pollution and conserve water through some recycling processes. Saving water must start with every human and every household to spread tot eh entire humanity.

Growing more trees and stopping the warming of the earth will lead to more rain. In many countries, there is not adequate water to use and drink. We must act quickly before this condition spreads to other countries as well. If we do not save water and regulate its use, our generation and the future generations will have to face unforeseen struggles to live.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.