Naan Virumbum Nool in Tamil Katturai

நான் விரும்பும் நூல் கட்டுரை

நான் மிக விரும்பி, ரசித்து, அனுபவித்து, பயன்பெற்ற ஒரு சிறந்த நூல் அக்னி சிறகுகள்‘. இந்தக் கட்டுரையில் அந்த நூலைப் பற்றிய சில தகவல்களையும் அதன் சிறப்புகளையும் காண்போம்.

நான் விரும்பும் நூல் கட்டுரை

நூல்கள் நமக்குத் பல வகைகளில் உதவுகின்றன. நாம் சில நூல்களை தகவல்களுக்காகவும், சில நூல்களை பொழுதுபோக்கிற்காகவும், சில நூல்களை அறிவையும் திறமையையும் வளர்த்துக் கொள்வதற்காகவும் படிக்கிறோம். சில நூல்கள் நம்மை ஊக்குவிக்கப் பயன்படுகின்றன. அத்தகைய நூல்களில் ‘அக்கினி சிறகுகள்’ நான் மிகவும் விரும்பி, ரசித்து, அனுபவித்து பயன்பெற்ற நூலாகும்.

அக்கினி சிறகுகள் என்ற நூல் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் நமது அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்களின் சுய சரிதையாகும். இதனை எழுதியவர்கள் டாக்டர் அப்துல் கலாம் மற்றும் அவரது உற்ற நண்பர் திரு அருண் திவாரி ஆகியோராவர். முதலில் ஆங்கிலத்தில் ‘The Wings of Fire’ என்ற பெயரில் எழுதப்பட்ட இந்த நூலை திரு மு. சிவலிங்கம் என்பவர் தமிழில் மொழி பெயர்த்தார். இந்த நூல் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, குஜராத்தி, மலையாளம், ஒரியா, மராத்தி, சீனம் போன்ற 13 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இந்த நூல் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் தமது இளமைப் பருவம் முதல் சந்தித்த பல்வேறு ஏற்ற இறக்கங்கள், இன்ப துன்பங்கள், கஷ்ட நஷ்டங்களை விவரித்து அவர் தனது வாழ்வில் எப்படி ஒரு உன்னதமான நிலைக்கு உயர்ந்தார் என்பதை அருமையாக விளக்குகிறது. எளிமையான நடையில் அமைந்த இந்த நூல் நாம் நமது முன்னாள் குடியரசுத் தலைவரின் வாழ்க்கையில் நடந்த சில சுவையான மற்றும் முக்கியமான பல சம்பவங்களை ஓரிடத்தில் காண வழி செய்கிறது.

நூல்களின் முக்கியமான ஒரு குறிக்கோள் நம்மை ஊக்குவிப்பதாகும். இந்த வகையில் நாம் அனைவரும் போற்றி வணங்கும் ஒரு மகத்தான தலைமகனின் வாழ்க்கையை நம்முன் விரிப்பதன் மூலம் இந்த நூல் நம்மை பெரிதும் ஊக்குவித்து ஒரு சிறந்த உத்வேகத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கிறது.

Naan Virumbum Nool KatturaiThe Book I Like – Essay

The book I liked and enjoyed and found inspiring was ‘Agni Siragugal’ (The Wings Of Fire). Let us learn something about this wonderful book in this essay.

Books are very useful to us in many ways. We read some books to gather some information. Some books are entertaining and some books help us grow our knowledge and skills. Some books inspire us. Agni Siragugal is one such book that inspires us a lot. I liked this book very much and found it highly inspiring.

Agni siragugal is a book concerned with the autobiography of Dr. A.P.J. Abdul Kalam, the former president of India. the authors of this book were Dr. Abdul Kalam and his friend Mr. Arun Tivari. The original version of this book was written under the title ‘The Wings of Fire’ in English, This book was later translated in English under the name ‘Agni Siragugal’. In addition to being translated in Tamil, this book has also been rendered in other languages including Telugu, Malayalam, Oriya, Marathi, Gujarati, Chinese, and others.

This book describes the ups and downs, pleasures and pains, successes, and failures experienced by Dr. A.P.J Abdul Kalam in the course of his life. Written in a simple style, this book contains some highly interesting and inspiring episodes, events, and experiences of the former president of India.

One of the prime objectives of books is to inspire us. By narrating from the life of a leader who we highly regard and respect, this book has become a highly inspiring one to millions including me. This book is an invaluable treasure n encouraging us and filling us with hope and positive energy.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.