Katturai Sutru Sulal Pathukappu | சுற்றுச்சூழல் பாதுகாப்பு – கட்டுரை

நாம் வாழும் இந்த பூமி மிக அழகானது நம் வாழ்கைக்குத் தேவையான வளங்கள் நிறைந்தது. இந்த பூமி, இந்த உலகில் தோன்றிய எல்லா உயிர்களுக்கும் மனிதர்களுக்கும் இயற்கை தந்த அருட்கொடை. சுற்று சூழல் என்பது நாம் வாழும் இந்த புவியையும் புவி சார்ந்த சுற்றுப்புற  அமைப்பையும் குறிக்கும். இதில் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களும் அடங்கும். இந்தக் கட்டுரையில் நமது சுற்றுப்புறத்தை ஏன் பாதுகாக்க வேண்டும்? எப்படிப் பாதுகாக்க வேண்டும்? என்று காண்போம்.

நமது சுற்றுப்புறத்தை நாம் பாதுகாக்கவிட்டால் இந்த பூமி மனிதர்களுக்கும் பிற உயிர்களுக்கும் ஏற்ற இடமாக இராது. தட்ப வெப்பம் மாறிவிடும், இயற்கை சீற்றங்கள் பெருகும், மழை வளம் குறையும், சூழல் மாசு படும். மேலும் இன்று நாம் சுற்று சூழலைப் பாதுகாக்க தவறினோமென்றால் அடுத்த தலைமுறை பல இன்னல்களை சந்திக்க நேரும்.

இன்று பல வளர்ந்த நாடுகளின் நகரங்களில் மூச்சு விடவே கடினமான சூழ்நிலை நிலவுகிறது. இது காற்று மாசுபடுவதால் வந்த வினைதான். சுற்று சூழல் மாசுபாட்டினால் நாம் நீர் நிலைகளில் சுத்தமான நீர் கிடைக்காமல் சுத்திகரிக்கப்பட்ட நீரை விலை கொடுத்து வாங்கும் நிலைமைக்கு வந்து விட்டோம். மழை குறைந்து விட்டது, வெள்ளங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. நிலவளம் குறைந்து வளரும் பயிர்களும் தானியங்களும் காய்கறிகளும் விஷத்தன்மை உள்ளதாக மாறிவிட்டன.

சுற்று சூழலைப் பாதுகாக்க நாம் சிலவற்றை முக்கியமாக செய்ய வேண்டும். நிலம், நீர் மாசுபடுவதை தவிர்க்க வேண்டும். மாசு உண்டாக்கும் காரணிகளை நாம் சுற்றுப் புறத்தில் விடக்கூடாது. இயற்கை வளங்களை அளவற்ற முறையில் உபயோகித்து அவற்றை தீர்த்துவிடக்கூடாது.

நமக்கு முன்னர் வாழ்ந்த பற்பல தலைமுறையினர் இந்தப் புவியை பாழாக்காது நமக்கு நல்ல முறையில் விட்டுச்  சென்றனர். நாமோ அதற்கு மாறாக அறிவியல் மற்றும் தொழில் வளர்ச்சி என்ற போர்வையில் சுற்றுசூழலை பெருமளவில் மாசு படுத்தி விட்டோம்.

சுற்று சூழலை யார் பாதுகாக்க வேண்டும் என்பது அடுத்த வினா. இந்தப் பணி ஒரு தனிப்பட்ட நிறுவனமோ அரசாங்கமோ செய்ய வேண்டிய ஒன்றல்ல. நம் ஒவ்வொருவருக்கும் உள்ள கடமைதான். சுற்றுசூழல் பாதுகாப்பு ஒவ்வொரு தனி மனிதனின் கடமை மற்றும் பொறுப்பு ஆகும். நாம் அனைவரும் பொறுப்பான வகையில் யோசிக்கும்போதும், செயலாற்றும்போதும், நமது சுற்றுப்புறம் காக்கப்படும்.

Environmental Protection – Essay

The earth we live in is a beautiful and resourceful planet suitable for a happy and comfortable life. This earth is the bounteous gift given by nature to man and other lives inhabiting this earth. Environment refers to the earth and its atmosphere. It consists of the five elements namely earth, eater, fire, air, and space. In this essay, let us discuss why we should take care of this environment and how must we do it.

If we fail to protect our environment, this earth will cease to be a suitable place for our lives. It will increase natural disasters, leave the surroundings unsuitable for a healthy life and affect the rains. If we fail to take care of the environment today, it will affect future generations.

Today the atmosphere of many cities in developed countries is unsuitable for breathing. This is because of air pollution. Because of polluting the watersheds, we are unable to drink water from water sources and are condemned to buy purified water. Rains have come down, floods have increased and the earth has become polluted resulting in crops and vegetables that are poisonous and unsuitable for healthy consumption.   

To protect the earth, we must do a few things very important. We must avoid polluting the earth, water, and air. We must not use natural resources in an uncontrolled way leading to their depletion.

Several generations that lived before us have lived their lives properly and have left this earth suitable for our lives. But in the name of industrialization and the development of science and technology, we have highly polluted the environment over the recent past. 

The next question is who must take care of the environment. Protecting the environment is not the task of a separate organization or government. It is the duty and responsibility of every man. If we all start thinking and acting in a responsible way, the environment will be benefitted.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.