Kamarajar Katturaigal in Tamil

காமராஜர் கட்டுரை

கர்மவீரர் என்று அழைக்கப்பட்ட காமராஜர் தமிழகத்தின் மிகச் சிறந்த தலைவர்களுள் ஒருவர். தமிழகத்தின் முதலமைச்சராக இவர் ஆற்றிய பணிகள் நிகரற்றவை. இதோ காமராஜரைப் பற்றி ஒரு சிறிய கட்டுரை.

காமராஜர் கட்டுரை

கர்மவீரர் காமராஜர் இந்த தமிழகம் கண்ட மிகச் சிறந்த முதலமைச்சர். காமராஜர் 1903 ஆம் ஆண்டு சூலை 15 ஆம் தேதி விருதுநகரில் குமாரசாமி நாடாருக்கு சிவகாமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். காமராஜர் மிகச்சிறிய வயதிலேயே தனது அளப்பரிய தேசப்பற்றினால் இந்திய சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்றுப் பல முறை சிறை சென்றார்.

இளம் வயதிலிருந்தே மனித நேயம் மற்றும் நட்புணர்வு காமராஜரின் ரத்தத்தில் நிறைந்திருந்தது. தமக்குப் போட்டியாகத் தம்மை எதிர்த்தவர்களைக்கூட தமது அமைச்சரவையில் சேர்த்து தமது பரந்த இதயத்தை இவர் நிரூபித்தார். தன்னுடன் பணியாற்றிய அனைவரையும் அரவனைத்துச் செல்வதில் காமராஜருக்கு நிகர் யாரும் இல்லை.

காமராஜர் 1953 ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு அன்று தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்றார். தமது சீரிய பணியால் தமிழ் நாடு பல்வேறு வகைகளிலும் வளர காமராஜர் ஆற்றிய தொண்டு இணையில்லாதது. அவரது ஆட்சிக்கு காலத்தில் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27,000 த் தொட்டது. 1920 ஆம் ஆண்டு காமராஜர் தமிழகத்தின் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்து மாணவர்கள் பசி இன்றிக் கல்வி கற்க வழிசெய்தார்.

காமராஜரது ஆட்சிக் காலத்தில் மிகப் பெரிய 10 நீர் பாசனத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம், சாத்தனூர், கிருசுணகிரி, ஆரணியாறு ஆகியவையாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் காமராஜர் அமைத்த மாத்தூர் தொட்டிப் பாலம் ஆசியாவின் மிகப்பெரிய தொட்டிப் பாலமாகும். இது பல மலை கிராமங்களின் குடிநீர்த்த தேவையைத் தீர்க்க உதவியது.

அவரது ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள் பாரத மிகு மின் நிறுவனம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம் (MRL) (இதன் தற்போதைய பெயர் CPCL), இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (ICF), நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை, கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை, மற்றும் மேட்டூர் காகிதத் தொழிற்சாலை.

தமிழக வளர்ச்சிக்கு காமராஜர் ஆற்றிய பணிகள் என்றென்றும் நமது நினைவில் பசுமையாக நிற்கும்.

Kamarajar Katturai

Popularly called as Karmavirar, Kamarajar was one of the best chief ministers that Tamil Nadu has ever seen. He was born in Virudunagar on July 3, 1903. His parents were Kumarasamy Nadar and Sivagami Ammaiyaar. At a very tender age, Kamarajar was pulled by a desire to take part in the freedom struggle which caused him several years of imprisonment.

Even as he was young, his blood bubbled with comradeship and humanitarian sentiments. He included even his opponents in his ministry thus proving his large heart. None could equal Kamarajar in giving a fitting leadership to his team in any capacity.

In 1953, Kamarajar took charge as the chief minister of Tamil Nadu on a Tamil New Year day. The contribution he gave for the development and growth of Tamil Nadu is matchless. During his tenure on the chief minister’s seat, Tamil Nadu’s number of schools grew to 27,000. To alleviate the hunger of school-going children, he introduced the mid-day meals scheme in Tamil Nadu in 1920.

During his period, 10 massive irrigation systems were created in Tamil Nadu including the Bhavani Sagar scheme, Kaviri Delta Development Scheme, Manimutharu, Amaravathi, Vaigai, Parambikkulam, Azhiyaru irrigation scheme, Sathanur, Krishnagiri and Araniyaru schemes. The Mathur tank reservoir Kamarajar had set up in Kanyakumari district is still the biggest of its kind in Asia. It satisfied the drinking water needs of a number of villages.

The companies that were started during his period were Bharat Heavy Electronics Limited, Neyveli Lignite Corporation, Manali Refinery, Integral Coach Factory, Nilgiris film strip manufacturing company, Guindy medical equipment research center, and Mettur Paper Mills.

The amazing job Kamarajar did for the development of Tamil Nadu will ever stay fresh in our memories.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.