Desiya Kodi Katturai

Desiya Kodi Katturai

தேசியக் கொடி கட்டுரை

இந்திய தேசியக்கொடியை மூவர்ணக் கொடி என்றும் கூறுவர். ஆரஞ்சு, வெள்ளை மற்றும் பச்சை நிறங்களில் மூன்று பட்டைகள் விளங்க நடுவில் அழகிய அசோக சக்கரம் மிளிர கம்பிரமாகப் பறக்கும் நமது தேசியக் கொடியின் அழகே அழகு. இந்தக் கட்டுரையில் நாம் நமது தேசியக் கொடியைப் பற்றிய சில சுவாரசியமான தகவல்களைக் காண்போம்.

தேசியக் கொடி கட்டுரை

முதன்முதலாக தேசியக் கொடியை 1947ஆம் வருடம் 22  ஜூலை அன்று காங்கிரசின் கூட்டத்தில் ஏற்றுக்கொண்டனர். அதன்பிறகு 15 ஆகஸ்டு 1947 அன்று இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு இது இந்தியா தேசியக் கொடியாக அங்கீகரிக்கப்பட்டது. இந்திய மூவர்ணக் கொடியை வடிவமைத்தவர் பிங்காலி வெங்கைய்யா என்பவராவார்.

இந்தியா தேசியக் கொடியின் அளவு இரண்டுக்கு மூன்று என்ற அளவீட்டில் அமைய வேண்டும். அதாவது இரண்டடி உயரமென்றால் மூன்றடி அகலம் என்பது இதன் பொருள். ஆரஞ்சு, வெள்ளை மற்றும் பச்சை நிற பட்டைகள் அனைத்தும் ஒரே அளவினதாக இருக்க வேண்டும். காதி எனப்படும் கதர்த் துணியிலேயே இந்தக் கொடியை தயார் செய்ய வேண்டும்.

இந்திய தேசியக் கொடியிலுள்ள மூன்று நிறங்களில் ஆரஞ்சு வீரத்தையும் அர்ப்பணிப்பையும் குறிக்கிறது. பச்சை நம்பிக்கை மற்றும் செழிப்பையும், வெள்ளை நிறம் அமைதி மற்றும் உண்மையையும் குறிக்கின்றன. நடுவிலுள்ள அசோக சக்கரம் தர்மத்தையும் நீதியையும் குறிக்கிறது. இவ்வாறாக இந்திய தேசியக் கொடி மிக ஆழமான பொருளை உடையது.

கொடி ஒரு தேசத்தின் சின்னம், மானம் மற்றும் கவுரவம். நாம் கொடிக்கு கொடுக்கும் மரியாதை நமது நாட்டிற்கு கொடுக்கும் மரியாதையாகும். கொடிகாத்த குமரன், இந்த தேசத்தின் கொடியைக் காக்க தனது இன்னுயிரைத் தியாகம் செய்தார். ஒரு தேசத்தின் கொடிக்கு எத்தனை மகத்துவம் உள்ளது என்றுணர்ந்த பாரதியார் “தாயின் மணிக்கொடி பாரீர் அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்” என்று பாடினார். நமது மூவர்ணக் கொடியை நாம் நமது உயிருக்கிணையாகப் போற்றி மதிக்க வேண்டும்.

National Flag Essay in Tamil

Indian National Flag is called as Tricolor flag. This is a beautiful flag with saffron, white and blue stripes with the Ashoka Chakra in the middle. The majestic looks of Indian national flag is something that is admirable. Let us see some interesting facts about Indian National Flag.

For the first time, Indian National flag was approved for the Constituent Assembly by the Indian National Congress on July 22, 1947. Later after the Independence of India, it was officially announced as the National Flag of the republic. The person who designed the tricolor flag was Pingali Venkaiya.

The dimensions of Indian National flag must be 2:3 meaning the length must be two times and the width must be three times in rectangular shape. The three stripes of saffron, white and green must all be in equal proportions. This flag must be made only in the hand-woven cloth of Kadhi.

Among the three colors of the Indian National flag, saffron color stands for courage and sacrifice; white stands for peace and truth, and green stands for hope and prosperity. The Ashoka Chakra in the middle stands for righteousness and justice. In this way, the National Flag of India represents a deep meaning.

The flag of a country is its symbol and honor. The respect we give to the flag is indeed the respect we give the nation. Kodikatha Kumaran sacrificed his valuable life to save the honor of the Indian National flag. Bharati having realized the importance of the National Flag, sang, “Come on, let us sing in praise of the glorious flag of our motherland that flutters beautifully.” We must respect our tricolor flag like our very life.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.