Anbu Katturai in Tamil

Anbu Katturai in Tamil

அன்பு – கட்டுரை

அன்பு இல்லையேல் நல்வாழ்க்கை இல்லை. அன்பு மனித வாழ்வின் மகிழ்ச்சிக்கும், உறுதித்தன்மைக்கும் வளர்ச்சிக்கும் ஆதாரம். அன்பு என்பது மனித உள்ளத்தில் தோன்றும் ஒரு மகத்தான நல்லுணர்வாகும். இந்தக் கட்டுரையில் அன்பின் மேன்மையைக் காண்போம்.

அன்பு – கட்டுரை

அன்பு மனித மனதில் தோன்றும் ஒரு உணர்வாகும். மனித நேயம், இரக்கம், பாசம்என்னும் பலவழிகளில் அன்பு வெளிப்படுகிறது. நாம் நமது குடும்பத்தினரிடம் காட்டும் அன்பு பாசம் எனப்படும். நமது நண்பர்களிடம் காண்பிக்கும் அன்பிற்கு நட்பு என்று பெயர். விலங்குகளிடமும், எளியோரிடமும், துன்பப்படுவோரிடமும் நாம் காட்டும் அன்பு இரக்கம் அல்லது கருணை எனப்படும். மற்ற மனிதர்களிடம் நாம் காட்டும் அன்பிற்கு மனித நேயம் என்று பெயர். பகைவரிடமும் துரோகிகளிடமும் நாம் காண்பிக்கும் அன்பிற்கு மன்னிப்பு என்று பெயர். தலைவன் தலைவியிடத்தில் காட்டும் அன்பிற்கு காதல் என்று பெயர். இவ்வாறு அன்பு ஒன்றேயாயினும் அது பலவிதங்களில் வெளிப்படுகிறது.

“அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர் புன்கண்ணிற் பூசல் தரும்” என்றார் திருவள்ளுவர். ஒருவரது உள்ளத்தில் உள்ள அன்பினை தாழிட்டு அடைத்து வைக்க இயலாது, தனது அன்பிற்குரியவர்கள் துன்பப்படுவதை பார்க்கும்போது அவர்களது உள்ளத்தில் உள்ள அன்பு கண்ணீராக தன்னையுமறியாமல் வெளிப்பட்டுவிடும். என்பது இதன் பொருள்.

அன்பு நாம் அன்பு கொண்டோராது நலத்தையும் மகிழ்ச்சியையும் நாடுகிறது. அன்பு உடையோர் தியாகம் உடையோர். நமது அன்பிற்குரியவருக்காக நாம் சிறிய மற்றும் பெரிய தியாகங்களை செய்ய முற்படுகிறோம்.

இறைவனிடத்தில் கொண்ட மிக உயர்ந்த அன்பினை பக்தி என்கிறோம். இந்த உயர்ந்த அன்பு மதம் சார்ந்தது அல்ல. பக்தியில் பழுத்த மனிதன் இந்த உலக பந்தங்களிலிருந்து விடுபட்டு மேலான வீடு பேற்றையே நாடுகிறான்.

அன்பில்லாத உலகில் நாம் ஒரு கணமும் வாழ இயலாது. “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது” என்கிறார் திருவள்ளுவர். அன்பு இல்லாத இல்வாழ்க்கை ஒரு நரகத்தைப் போன்றது. அன்பு இருக்கும் குடும்பம் ஒரு சொர்கத்தைப் போன்றது. நாம் நமது உள்ளத்தின் அன்பை வளர்த்துக் கொள்வதன் மூலம் நாமும், நமது இல்லமும், இந்த உலகமும் நலம்பெற இயலும்.

Love Essay

Love is a magnificent feeling that is born in the human heart. Humanity, compassion, and affection are some of the various expressions of love. The love we show to our family is affection. The love that we express towards friends is friendship; the love that we show towards animals, the suffering and simple people is known as compassion. The love that we show towards other fellow humans is called as humanity. The love we express towards our enemies is known as forgiveness. The love between two lovers is called love. In this way, love expresses itself in different ways.

Thiruvalluvar said, “Love cannot be locked inside our hearts. When we see our dear ones suffer, the love contained in our hearts automatically bubbles forth in the form of tears.”

Love seeks the wellness and happiness of our dear ones. we are prepared to do a lot of sacrifices for our beloved ones.

The highest form of love that we show towards God is known as devotion. Such a devotion is above religions. The man who cultivates such a feeling towards the almighty escapes from the worldly bonds and attains the highest state of life.

We cannot live even for a moment without love. Thiruvalluvar says, “A family must be characterized by love and righteousness. The family devoid of love will feel like a hell. The Family that is bonded by love is verily a heaven. When we develop love in our hearts, our family and the world at large can be a wonderful place to live in.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.