Acham Thavir Katturai In Tamil

Acham Thavir Katturai In Tamil

அச்சம் தவிர் தமிழ் கட்டுரை

அச்சம் என்பது மடமையடா என்று கூறினார் ஒரு புலவர். அச்சம் மனச் சோர்வையும் மன உறுதியின்மையையும் காண்பிக்கிறது. அச்சம் தவிர என்றார் பாரதியார். அச்சம் மனித முன்னேற்றத்திற்கும் சந்தோஷமான வாழ்விற்கும் ஒரு பெரிய தடைக்கல். அச்சம் தவிர்ப்பது எப்படி என்று இந்தக் கட்டுரையில் காண்போம்.

அச்சம் தவிர் தமிழ் கட்டுரை

அச்சத்தால் தினம் தினம் செத்து பிழைப்பதை விட ஒரே முறை சாதல் நலம் என்றனர் நம் ஆன்றோர்கள். அச்சம் பலவீனத்தின் அடையாளம். தன்னம்பிக்கை இல்லாதவனே அச்சப்படுகிறான். அச்சத்தை முழுமையாக அகற்றிவிட்டால்தான் முன்னேற்றத்திற்கான பாதை திறக்கப்படும். அச்சம் என்பது ஒரு மனிதனின் வளர்ச்சி, ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்கு ஒரு பெரிய தடைக்கல்.

தன்னம்பிக்கை இல்லாதவனே நாத்திகன் என்று கூறினார் சுவாமி விவேகானந்தர். மனிதன் எதை நினைக்கிறானோ அதுவாகவே மாறி விடுகிறான். அச்சப்படும்போது மனிதனின் திறமைகள், அறிவு மற்றும் ஆற்றல்களை வெளிப்படுத்தி செயல்பட முடியாமல் போகிறது. தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதே அச்சம் தவிர்ப்பதற்கு உறுதியான வழி.

வலிமையே வாழ்வு; பலவீனமே மரணம். நாம் நீச்சல் கற்றுக்கொள்ள விரும்பினால், நீரில் குதித்தால்தான் அது சாத்தியமாகும். நீரைக்கண்டு அச்சப்படுபவன் என்றுமே நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது. துணிவினை நாம் வளர்த்துக்கொள்ளும்போது அச்சத்திலிருந்து விடுபடுகிறோம். தன்னம்பிக்கை நிரம்ப உள்ள மனிதர்களோடு நட்பு கொள்ளும்போது நமக்கு அச்சம் தவிர்க்க வழி ஏற்படுகிறது.

விடாமுயற்சி உடையவன் தன்னால் சமுத்திரத்தையே குடித்துவிட முடியும் என்றும் மலையையே உடைத்தெறிய முடியும் என்றும் பறை சாற்றுகிறான். அத்தகைய நம்பிக்கை அச்சத்தை தகர்த்தெறிந்துவிடும்.

மனிதன் வாழ்வில் பல சாதனைகளை புரிய பிறந்தவன். நாம் சாதிக்க விரும்புவது என்னவென்றாலும் அச்சத்தைத் தவிர்த்தாலே அது நடக்கவியலும். உச்சிமீது வானிடிந்து வீழுகின்றபோதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்றார் பாரதியார். வாழ்க்கை பல சறுக்கல்களைக் கொண்டது, பல ஆபத்துக்கள் நிறைந்தது, பல எதிர்பாராத ஏமாற்றங்களைக் கொண்டுவருவது. இவை எதையும் கண்டு அச்சப்படாமல் நாம் வாழப்பழகுதலே நம் வாழ்க்கையில் நாம் முன்னேற்றப் பாதையில் செல்வதற்கு சிறந்த வழி.

Give up fear Tamil Essay

A poet in Tamil said, “Fearing is foolishness”. Fear indicates mental fatigue and psychological weakness. Bharati said, give up fear. Fear is the big roadblock to human progress and happiness. Let us see how to remove fear in this essay. 

Our ancestors said, it is better to die once rather than dying every day in fear. Fear is the sign of weakness. One who lacks self-confidence succumbs to fear. When we completely remove fear, we can move forward in the path of progress. Fear is the main hurdle to realize happiness, health and progress in human life.

Swami Vivekananda said once, “The one who lacks self-confidence is an atheist”. Man becomes that which he thinks about. When he is under fear, man cannot exercise his talents, intelligence and powers. The right way to escape fear is to develop self-confidence.

Strength is life; weakness is death. When we want to learn swimming, we need to jump into the water. The one who fears water can never learn swimming. When we develop courage, we come out of fear. When we move with people having courage and confidence, we can foster our fearlessness.

The one who has perseverance and hard work proclaims that he can drink the entire ocean and can break the entire mountain into pieces. Such a confidence removes fear in man.

Man is born to achieve several feats in life. Whatever we wish to achieve in life, it is possible only when we come out of fear. Bharati sang, “I do not fear even when the sky breaks and falls on my head”. Our life is filled with a lot of jerks, dangers, failures and disappointments. Despite such occurrences, we must never fear for anything. This is the right royal road to progress. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.