Kulanthaigal Katturai in Tamil | குழந்தைகள் கட்டுரை

குழந்தை மனிதனின் இளமைப் பருவத்தைக் குறிக்கிறது. குழந்தைகளை விரும்பாதவர் யாரும் இருக்க முடியாது. குழந்தைகளின் அழகிய சிரிப்பு யாரையும் மயக்கிவிடும். ஒரு குழந்தையைப் பார்த்தவுடனேயே எவருக்கும் அதைத் தூக்கி, அணைத்துக் கொஞ்சத் தோன்றும். குழந்தைகள் மகிழ்ச்சி, நம்பிக்கை, அன்பு, அழகு, எளிமை, கள்ளமில்லாமை ஆகியவற்றின் அடையாளங்கள். குழந்தைகளோடு பழகும்போது எப்படிப் பட்டவரும் தனது கவலைகளை மறந்து மகிழ்வது இயற்கை.

குழந்தைப் பருவம் அமைதியான, இனிமையான, கவலைகள் அற்ற பருவம். ஒரு குழந்தைக்கு வேண்டிய அனைத்தையும் அதன் பெற்றோர் கவனித்துக் கொள்வதால் குழந்தைகள் எந்த ஒரு வேலை பளுவும் இல்லாமல் சந்தோஷமாக ஆடிப்பாடி திரிகிறார்கள்.

ஆயினும் இப்படிப் பட்ட சந்தோஷமான வாழ்க்கை எல்லாக் குழந்தைகளுக்கும் வாய்த்து விடுவதில்லை. வறுமையில் வாடும் குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு தமது வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை தேவைகள் கூடக் கிடைப்பதில்லை. உணவு, உடை உறையுள் ஆகிய இம்மூன்றுமே கிடைக்காத குழந்தைகள் தமது இளமைப் பருவத்தை சந்தோஷமாக அனுபவிக்க இயலாது.

ஒளவையார் “வறுமை கொடியது! அதனினும் கொடியது இளமையில் வறுமை!” என்று கூறுகிறார். இளமையில் வறுமையில் வாடும் குழந்தைகள் தமது வாழ்க்கையின் மிக அற்புதமான கட்டத்தை கவலையிலும், சோர்விலும் கழிக்க நேருகிறது.

தாய், தந்தையர் இல்லாமல் வாடும் குழந்தைகள் ஆதரவற்றோர் இல்லங்களில் தமது இளமைப் பருவத்தைக் கழிக்க நேருகிறது. இவ்வாறான குழந்தைகளைக் காணும் நாம் நம்மாலியன்ற வகையில் அவர்களுக்கு ஊக்கமும், ஆக்கமும் வழங்கி அவர்களது வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும்.

குழந்தைப் பருவம் மனித வாழ்க்கைக்கு வேண்டிய அறிவு, நல்ல பழக்கங்கள், ஒழுக்கம், ஆகியவற்றைக் கற்க ஏற்ற பருவம். குழந்தைப் பருவத்தில் நேரத்தை வீணாக்காது நல்ல பல விஷயங்களில் நமது கவனத்தை செலுத்த வேண்டும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள். இளமைப் பருவத்தில் நல்ல பழக்கங்களைக் கற்கவில்லை என்றால் வளர்ந்த பிறகு அவற்றை கற்பது கடினம். எனவே, குழந்தைகளுக்கு பெற்றோரும் சமுதாயமும் நல்ல விஷயங்களை சொல்லித்தர வேண்டும்.

Children Essay

Childhood represents the young age of humans. There can be no one who does not love children. The beautiful smile of the children can mesmerize anyone. As soon as anyone sees a baby, anyone will feel like pick it up, hug it and fondle it. Children are symbols of happiness, hope, love, beauty, simplicity, and innocence. It is natural for a person to forget his worries and be happy when dealing with children.

Childhood is a quiet, pleasant, carefree period in one’s life. Children thrive happily without any workload because their parents take care of everything they need.

However, such a happy life is not for all children. Children born into poverty-stricken families do not even have the basic necessities of life. Children who do not have access to food and clothing will not be able to enjoy their adolescence happily.

Avvaiyar, a Tamil poetess of the Sangam age said in a verse, “Poverty is bad! Even worse is poverty in childhood!” Children living in poverty at a young age are going to spend the most wonderful phase of their lives in anxiety and exhaustion.

Children living without parents are forced to spend their childhood days in orphanages. We who see such children need to encourage and motivate them in every way we can to improve their lives by giving them whatever they need in addition to love, care and resources.

Childhood is a time for learning the basics of human life, good habits, and discipline. We need to focus our attention on many good things by not wasting our time during childhood. A propverb in Tamil says, “What is not curved in the fifth year can never be curved at the fiftieth year. It is difficult to learn good habits later in life if you do not learn them during childhood. Therefore, parents and society should teach good things to children in every possible way.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.