Kannadasan Katturai

கண்ணதாசன் கட்டுரை

கவியரசர் கண்ணதாசன் தமிழ் மொழிக்கே கிடைத்த ஒரு பெரிய பொக்கிஷம். இவரது பாடல், கவிதை, உரைநடை, மேடைப் பேச்சு, ஆன்மிக இலக்கியம் ஆகியன தமிழ் கூறும் சமூகத்தினரிடையே ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. இவரது சிந்தனைகளை போற்றிய பத்திரிக்கை மற்றும் சினிமா உலகங்கள் இவருக்கு மறையாப்புகழை ஈட்டித்தந்தன. இந்தக் கட்டுரையில் கண்ணதாசனைப் பற்றி சில கருத்துக்களைக் காண்போம்.

கண்ணதாசன் கட்டுரை

கவிஞர் கண்ணதாசன் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடிக்கு அருகில் சிறுகூடல்பட்டி என்ற ஊரில் பிறந்தார். சிறு வயதிலேயே குழந்தையில்லாத பழனியப்ப செட்டியார் சிகப்பி ஆச்சி என்னும் தம்பதியினருக்கு சுவீகாரமாகக் கொடுக்கப்பட்ட இவர் தனது சிறு வயதிலேயே வீட்டை விட்டு சென்னைக்கு வேலை தேடி வந்து விட்டார்.

எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த கண்ணதாசனிடம் படிப்பறிவு நிரம்ப இருந்தது. இளமையிலேயே இவரிடம் சிறப்பாகப் பொழிந்த கவிதை இயற்றும் மற்றும் உரைநடை எழுதும் ஆற்றலை கண்டறிந்த சினிமா மற்றும் பத்திரிக்கை உலகங்கள் இவருக்கு நீண்ட புகழைத் தேடித்தந்தன.

கண்ணதாசன் பாடல்களால் நல்வழிப் படுத்தப்பட்டோர் ஏராளம். கவிஞர் வாலி, கண்ணதாசன் ‘மயக்கமா, கலக்கமா’ என்ற கண்ணதாசனது பாடல் வரிகளாலேயே வாழ்வில் இழந்திருந்த பிடிப்பினை மீண்டும் பெற்று நம்பிக்கையுடன் முன்னேறியதாகக் கூறுவார்.

பல துறைகளிலும் சிறந்து விளங்கிய கண்ணதாசன் ஆரம்பத்தில் ஒரு நாத்திகராக இருந்தாலும் பிற்காலத்தில் இந்து சமயத்தில் ஒரு ஆழமான பற்றுடையவராக மாறி ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ என்னும் ஒரு அரிய நூலை இயற்றியுள்ளார். கண்ணதாசன் மறைந்தாலும் அவரது பாடல்களும் எழுத்தும் என்றும் மக்கள் மனதில் நின்று அவர்களுக்கு வழிகாட்டும் என்பதில் ஐயமில்லை.

Kannadasan Essay

Kaviyarasar kannadasdan is a priceless treasure for the world of Tamil literature. His songs, poems, prose, speech and spiritual literature produced a great impact in the minds of Tamil speaking people worldwide. The world of journalism and cinema in Tamil Nadu extolled his thoughts and literary talents and fetched him immortal fame. In this essay we discuss a few facts about Kannadasan.

Poet Kannadasan was born in the village of Sirukoodalpatti near Karaikudi in the Sivaganga district of Tamil Nadu. As a young boy, he was given in adoption to a couple named Palaniyappa Chettiyar and Sigappi Achi. Even before turning into an adult, Kannadasan left the house and went to Chennai in search of jobs and livelihood.

Kannadasan had studied only till eighth class. However, due to his avid reading habits, he has developed a sound literary knowledge. Seeing the poetic and prose writing talents in Kannadasan, the cinema and journal world pushed him to never ending fame.

A lot of people have been inspired by the poems, songs and writings of Kannadasan. Poet Vali used to say that at a time when he had lost his hopes in life, Kannadasan’s writings had helped infuse courage and confidence in him once again.

With his talents in different fields, Kannadasan was an atheist in the beginning. However, towards the later part of his life, he had attached himself deeply to Hinduism and had written a book titled “Meaningful Hinduism”. Though Kannadasan would have departed from this earth, his writings will stay here forever to inspire the masses.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.