Aasiriyar katturai in Tamil

Aasiriyar katturai in Tamil

ஆசிரியர் கட்டுரை

ஆசிரியர் என்ற வார்த்தை ஒரு அற்புதமான சொல். ஆசு என்றல் குற்றம் என்று பொருள். இரியர் என்றால் நீக்குபவர் என்று பொருள். எனவே ஆசிரியர் என்ற சொல்லுக்கு குற்றம் நீக்குபவர் என்ற ஒரு ஆழ்ந்த பொருள் உள்ளது. ஆசிரியர்கள் நமது அறிவுக் கண்ணைத் திறக்கின்றனர். இந்தக் கட்டுரையில் ஆசிரியர்களின் சிறப்பைப் பற்றி காண்போம்.

ஆசிரியர் கட்டுரை

ஆசிரியர்கள் அறிவு என்ற மாளிகையின் திறவுகோல்கள். அவர்கள் கல்விக் கோவிலில் குடியிருக்கும் கடவுள்கள். நமது அறிவு, ஆற்றல், திறமைகள், பண்புகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், நோக்கங்கள், முயற்சிகள் யாவற்றையும் வளர்த்து நம் வாழ்வில் ஒளியேற்றும் ஆசிரியர்கள் நாம் போற்றி வணங்க வேண்டிய தெய்வங்கள்.

நாம் நம்மை சுற்றி பல்வேறு விதமான மனிதர்களை பார்க்கிறோம். இந்த சமுதாயத்தில் பல்வேறு விதமான தொழில்கள் உள்ளன. பல்வேறு விதமான தொழில்துறைகளும் பணிகளும் உள்ளன. இவை அனைத்திலும் இருந்து செயல்படும் அனைத்து மனிதர்களும் ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டோரே. எனவே சமுதாய மற்றும் தனி மனித வளர்ச்சியில் ஆசிரியர்களின் பங்கு அளவிட முடியாத ஒன்று.

ஆசிரியர்கள் பொறுமையின் சிகரங்கள். நாம் கல்வி கற்கும்போது செய்யக்கூடிய இடையூறுகளை பொறுத்துக் கொண்டு நமக்கு அவர்கள் அன்போடும் அரவணைப்போடும் கற்பிக்கின்றனர். இத்தகைய ஆசிரியர்கள் நமது வணங்குதலுக்கும் போற்றுதலுக்கும் உரியவர்கள்.

நமது பண்புகள், மற்றும் பழக்க வழக்கங்களை முறைப் படுத்தி செம்மையைப் படுத்தி நமது வளமான வாழ்க்கைக்கு வித்திடும் ஆசிரியர்கள் நமது உயர்விற்கு வழி செய்யும் ஏணிப்படிகள். தமது அயராத பணியால் ஒவ்வொரு ஆசிரியரும் பற்பல மாணவர்களின் அறிவு கண்களைத் திறக்கிறார். எனவே ஆசிரியர்களை நாம் போற்றி அவர்களிடம் நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும்.

எழுத்தறிவித்தவன் இறைவனாவான் என்பது தமிழில் நாம் காணும்  முதுமொழி. சமஸ்கிருதத்தில் ஒரு முதுமொழி ஆச்சார்யா தேவோ பவ என்று கூறுகிறது. இதன் பொருள் ஆசிரியர் தெய்வத்திற்கு சமமானவர் என்பதேயாகும். எனவே நாம் நமது ஆசிரியர்கள் காட்டும் வழியில் சிறப்பான முறையில் பயணித்து நமது வாழ்க்கையை செம்மையாக்கி கொள்ள வேண்டும்.

Aasiriyar katturai in Tamil

Teacher Essay in Tamil

The word Asiriyar in Tamil (describing a Teacher) is a profound term. The prothet ‘Asu’ means faults. The epithet ‘Iriyar’ means one who removes them. Hence the term ‘Asiriyar’ means one removes our faults. Teachers open up our eyes of wisdom. Let us know the greatness of teachers in this essay.

Teachers are the key to the mansion of knowledge. They are the gods dwelling in the temples of learning. They nurture the growth and development of our knowledge, talents, strength, habits, belifs, aims, efforts and others in a focused way and brighten up our lives. Hence they are gods whom we should admire.

We see different kinds of people around us. In the society around us, there are different kinds of professions. There are different domains of social life and lots of jobs and professions. The people functioning in the different domains of life have all been shaped by teachers. Hence the role of teachers in the development of this society and individuals is a crucial one.

Teachers are the peaks of patience. They bear the disturbances we cause them during the learning process and teach us patiently. Such teachers are fit to be worshipped and revered.

The teachers who streamline and shape our habits and culture are actually planting the seeds for our glorious future and hence they are the ladders to our progress. A teacher relentlessly works forward to open up the knowledge eyes of a lot of his students. Hence we must never fail to respect and regard out teachers. We must be thankful to them.

A proverb in Tamil says, “The one who taught you is indeed your god”. A famous proverb in Sanskrit says, “Acharya Devo Bhava” meaning Teacher is equal to god. We must travel in the path shown by our teachers and become successful in our lives.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.