Mayil Katturai In Tamil | மயில் கட்டுரை

மயில் ஒரு மிக அழகான பறவை. மயில் தனது நீலப்பச்சை நிறத்திலமைந்த அழகான தோகைக்கென உலகெங்கிலும் போற்றப்படுகிறது. ஆண் மயிலுக்கு விசிறி போல விரிந்த தோகை உண்டு, பெண் மயிலுக்கு இத்தகைய தோகை இல்லை. ஆண் மயில்கள் பெண் மயில்களை கவர்வதற்காக அவற்றின் தோகைகளை பயன்படுகின்றன. ஒரு மயிலுக்கு அதன் தோகை முழுவதுமாக வளர மூன்று ஆண்டுகள் பிடிக்கும். உலகத்தின் பல தொன்மையான கலாச்சாரங்களில் மயில் பற்றிய செய்தி காணப்படுகிறது.

மயில்களால் ஒரு மணி நேரத்திற்கு 16 கிலோமீட்டர் வேகத்தில் ஓட முடியும். மயில் இந்தியாவின் தேசியப்பறவை ஆகும். இந்தியாவில் மயில் 1972 வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட பறவை இனம் ஆகும். மயிலை வேட்டையாடுவது இந்தியாவில் சட்டப்படி தண்டிக்கப்படக்கூடிய குற்றம். இவற்றை இந்தியாவில் வளர்ப்பு மிருகங்களாகவும் வைத்திருக்க முடியாது. மயில்கள் பெரும்பாலும் அவற்றின் தோகை, இறைச்சி, மற்றும் கொழுப்பிற்காக வேட்டையாடப் படுகின்றன.

மயில்கள் அனைத்துண்ணிகள். இவை தானியங்கள், இலைகள், பழங்கள், சிறு பாம்பு, மற்றும் பூச்சிகளை உண்ணும். மயில்களால் அதிக நேரம் காற்றில் பறக்க இயலாது. ஆயினும் அவை தமது சக்தி வாய்ந்த இறக்கைகளால் சிறிது தூரம் வரை பறந்து செல்ல இயலும். மயில்கள் பறப்பதும் தோகை விரித்து ஆடுவதும் கண்கொள்ளாக் காட்சியாகும். வேனில் மேகங்கள் சூழ்ந்து மழைக்கான அறிகுறிகள் தோன்றும்போது மயில்கள் தோகை விரித்து ஆடும் என்று கூறுவர்.

மயில்கள் உலகத்தின் மிகப்பெரிய பறவைகளும் ஒன்று என்று சொல்லப்படுகிறது. இவற்றின் இறக்கைகள் 140 முதல் 160 சென்டிமீட்டர் வரை வளரும். இவற்றின் தோகை 160 சென்டிமீட்டர் வரை வளரும். மயில் இந்தியாவின் தேசியப்பறவை ஆதலால் நாம் எங்கேனும் ஒரு மயில் இறந்து கிடப்பதை பார்த்தால் அதன் மேல் ஒரு தேசியக்கொடியை போர்த்த வேண்டும் என்று சொல்லப்படுகிறது. மயிலைப் பாதுகாக்க நாம்மாலியன்ற முயற்சிகளை நாம் மேற்கொண்டு இந்த அரிய மற்றும் அழகான பறவைகளை நாம் காக்க வேண்டும்.

Peacock Essay In Tamil

Peacock is a very beautiful bird. Peacock is admired around the world for its beautiful and highly colorful blue-green feathers. The male peacock has fan-like feathers, while the female does not have them. Male peacocks use their feathers to attract female peacocks. It takes a peacock three years to grow its feathers to their full length. Mentions and information about the peacock are found in many ancient cultures of the world.

Peacocks can run at speeds of up to 16 kilometers per hour. The peacock is the national bird of India. The peacock is a protected bird species in India under the 1972 Wildlife Conservation Act. Peacock hunting is a crime punishable by law in India. These birds cannot be kept as pets in India either. Peacocks are often hunted for their prey, meat, and fat.

Peacocks are omnivores in terms of their eating preferences. They eat grains, leaves, fruits, small snakes, and a variety of insects. Peacocks cannot fly in the air for too long. However, with their powerful wings, they can fly quite a distance in a swift movement. The sight of peacocks flying and dancing with their colorful feathers is a beautiful sight to behold. It is said that peacocks spread their wings when there are signs of rain surrounded by dark clouds around.

Peacocks are said to be one of the largest birds in the world. Their wingspan is 140 to 160 cm. Their wingspan is up to 160 cm. The peacock is the national bird of India so it is said that if we see a peacock lying dead anywhere we should wrap a national flag over it. We must make every effort to protect the peacock and safeguard these rare and beautiful birds from extinction.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.