En Amma Katturai In Tamil

En Amma Katturai In Tamil

என் அம்மா கட்டுரை

என் அம்மா ஒரு நிகரற்ற அம்மா. எனது பாசத்திற்கும், அன்பிற்கும், மதிப்பிற்கும் போற்றுதலுக்கும் உரியவர் என் அன்பு அம்மா. எனக்கு என் அம்மா ஒரு நல்ல தாய், நண்பன், ஆசான் மற்றும் வழிகாட்டி. இந்தக் கட்டுரையில் என் அம்மாவின் சிறப்புகளைக் கூறியிருக்கிறேன்.

என் அம்மா கட்டுரை

என் அம்மா நான் வணங்கும் முதல் தெய்வம். எனது வாழ்நாளில் இறைவன் எனக்களித்த விலை மதிப்பில்லாத பொக்கிஷம் எனது தாய் தான். ஒவ்வொருவருக்கும் அவரது தாய் ஒரு சிறந்த தாய்தான். இருப்பினும் ஏன் எனது தாய் ஒரு ஒப்பற்ற அன்னை என்பதற்கு பல காரணங்கள் உள்ளன.

அன்னையே ஒரு குழந்தைக்கு முதல் வழிகாட்டி. நான் தவறு செய்யும்போது கண்டிப்புடன் என்னை திருத்தியதில் எனது தாய் எனது மனதில் நீங்காது நிற்கிறாள். அதே சமயம் எனது தொல்லைகளை மன்னித்து பொறுத்தருளுவதில் எனது தாய்க்கு நிகர் வேறு யாரும் இருக்க முடியாது.

எனக்கு கருது தெரிந்த நாள் முதலே எனது தாய் என்னை எந்த அளவிற்கு சிறப்பாக வளர்த்தாள் என்பதை நான் கண்டு ஆனந்தித்து அனுபவித்து மகிழ்ந்திருக்கிறேன். நான் ஆண் குழந்தையாக இருந்தாலும் எனது இளம் பருவத்தில் எனக்கு சடை பின்னி, தலை நிறைய பூச்சூட்டி பலவிதமாக அழகு பார்த்தாள். நான் எதையுமே எனது தாயிடம் பகிர்ந்து கொள்ளத் தயங்கியதில்லை. நான் துயருற்ற போது எனது தாய் எனக்கு ஒரு நல்ல நண்பராக இருந்து என்னை தேற்றினாள்.       எனது சிறு சிறு வெற்றிகளையும் கண்டறிந்து பாராட்டி பெருமையுடன் அனைவருக்கும் கூறிய எனது தாய் என்னை சீராட்டி அன்புடன் பேணி வளர்த்தாள்.

எனது அம்மா சமயற்கலையில் கை தேர்ந்தவர். சுவையான பல உணவு வகைகளை அன்புடன் எங்கள் யாவருக்கும் சமைத்துக் கொடுத்து நாங்கள் மகிழ்ச்சியுடன் உண்பதை அழகு பார்ப்பாள் என் அன்புத் தாய். தனக்கென எதையும் வைத்திராது குழந்தைகள் எங்களுக்கே அனைத்தையும் தந்து எங்கள் மகிழ்ச்சியான வாழ்வில் மட்டுமே தான் களிப்பு அடைந்தாள் என் அன்புத்தாய்.

My Mother Essay in Tamil

My mother is a matchless mother. She is the object of my adoration, love, respect, and praise. My mother has been a good mother, friend, teacher, and guide to me in my life. Here I share a few wonderful facts about my mother.

My mother is my first god. She is the valuable treasure god has given me in my life. For everyone, their mother is a great mother. However, why my mother is something very special ensues from the following reasons.

Mother is the first guide to every child. My mother gently chided me whenever I committed a mistake and delicately taught me how to live. Hence, she stands as a guidepost in my heart forever. At the same time, there can be no one equal to her in forgiving me.

Right from the day when I became aware of my existence, I have seen, felt and enjoyed the way my mother took care of me. Though I was a male child, my mother plighted my hair in different ways and decorated me with a lot of flowers. I never hesitated to share anything with my mother. When I was distressed, my mother had been a good friend to me and pacified me. She identified even the smallest of my achievements and appreciated me. She conveyed such victories to others and took pride in my development.

My mother was a great cook. She prepared a lot of delicacies and served us fondly. She happily enjoyed how we relished them to her heart’s content. My mother never reserved anything for herself. She sacrificed all her life, time and efforts to take care of us and rejoiced in our happiness and growth.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.