Tamil Ariviyal Sinthanaigal Katturai

தமிழ் அறிவியல் சிந்தனைகள் கட்டுரை

பழந்தமிழர் இலக்கியங்கள் வாழ்வின் சிறந்த விழுமியங்களை வெளிக்கொணரவே படைக்கப்பட்டன. ஆயினும் இவற்றில் பல்கிப் பெருகிக் காணப்படும் பற்பல அரிய அறிவியல் சிந்தனைகள் தொன்று தொட்ட காலம் முதலே தமிழர் மிகச் சிறந்த அறிவியல் அறிவினைப் பெற்றிருந்தனர் என்பதற்கு சான்றாக அமைகின்றன. தமிழ் நூல்களில் காணும் சில வியத்தகு அறிவியல் சிந்தனைகளை இந்தக் கட்டுரையில் காண்போம்.

தமிழ் அறிவியல் சிந்தனைகள்

தொன்று தொட்ட காலம் முதலே தமிழர் வியத்தகு அறிவியல் அறிவினைப் பெற்றிருந்தனர் என்பதற்கு தமிழ் இலக்கியங்களே சான்று. பண்டைய தமிழ் இலக்கியங்களில் வானியல், மண்ணியல், இயற்பியல், உயிரியல், பயிரியல், மருத்துவவியல், கட்டிடவியல் மற்றும் அறிவியலின் பற்பல துறைகளை பற்றிய அரிய பல தகவல்களைக் காணுகிறோம்.

கோள்களுக்கு அவற்றின் நிறத்திற்கு ஏற்ப தமிழில் அப்போதே பெயர் கொடுத்துள்ளமை வியக்கத்தக்கது. சில காலத்திற்கு முன்புதான் நவீன வானியலில் இந்தத் தகவல்களைக் கண்டறிந்துள்ளனர். சிவந்த கோள் என்பதால் செவ்வாய் என்றனர். வெள்ளித் தாது உள்ளதாக தற்போது கண்டறியப்பட்டுள்ள கோளை அன்றே தமிழர் வெள்ளி என்றனர். வெள்ளிக் கோள் சூரியன் தோன்றுவதற்கு முன்பே வானில் தோன்றி விடுவதால் அதனை விடிவெள்ளி என்றனர்.

ஒரு வருடத்தினை கார்காலம், கூதிர்காலம், இளவேனில், முதுவேனில், முன்பனி, பின்பனி என ஆறு வகையாக பிரித்தனர். ஒரு நாளினை யாமம், வைகறை, விடியல், காலை, ஏற்பாடு, மாலை என ஆறு வகையாக பிரித்தனர். இது தமிழரின் கால அறிவினைக் காட்டுகிறது.

தொல்காப்பியர் இந்த உலகில் தோன்றியுள்ள உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவு வரையுள்ள உயிர்களாகப் பிரித்துள்ளார்.

பழந்தமிழர் உணவில் பற்பல மருந்துப் பொருட்கள் இருந்துள்ளன. அவர்கள் உணவே மருந்து மருந்தே உணவு என்ற கோட்பாடுடன் வாழ்ந்தது தெளிவாகத் தெரிகிறது. சரியான உணவுப் பழக்கம் இந்த உடலுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நாம் பின்வரும் திருக்குறளில் காணுகிறோம்.

“மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு

அருந்தியது அற்றது போற்றி உணின் “

கல்லணை சங்க காலத்திலேயே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது. இது இன்று வரை உறுதியாக செயல்படும் உலகத்தின் மிகப் பழமையான அணை.

பண்டைய காலத்திலேயே தமிழர் சக்கரத்தினை அறிந்திருந்தனர். பழந்தமிழ் நாட்டில் குயவர்கள் சக்கரத்தைக் கொண்டு மட்பாண்டங்களை செய்தனர்.

இதுவரை நாம் இக்கட்டுரையில் கண்டவை சில துளிகளே. தமிழ் இலக்கியங்களில் காணும் அறிவியல் சிந்தனைகள் கடலினை ஒத்தவை.

Thamil Ariviyal Sinthanaigal Katturai–Tamil scientific thoughts essay

Tamil literary works were composed only to bring to surface the lofty ideals of life. However, we see in them myriad scientific thoughts scattered all over. They are a proof that the ancient Tamil community had a superior scientific knowledge. Let us look at some of the amazing scientific thoughts emerging from Tamil literature.

From ancient times, the Tamil people had exceptional scientific knowledge. Tamil literature is a proof to this fact. In the ancient Tamil literature, we see a lot of rare and advanced information about astronomy, geology, physics, biology, agriculture, medicine, and construction in addition to many other fields of science.

Tamil people had given names to planets based on their color which were only discovered recently. Mars was named as Sevvaay meaning the red planet. The planet which has been now discovered to contain the mineral of silver was long back called as Velli meaning silver by Tamil people. Venus appears in the sky much before the sunrise. So they called this planet ‘Vidivelli’.

The ancient Tamil community had divided a year into six seasons. A day was similarly divided into six parts based on the intensity of sunlight.

Tholkappiyar, an ancient Tamil poet classifies the lives on this earth into six types based on their sensory perception capabilities. He divides the flora and fauna under six types from those with one sense to those with six senses.

The ancient Tamil people had a lot of medicinal ingredients in their cooking. They believed in the concept that food has to work like medicine and medicine has to be taken as food. The importance of right food habit is given in a Thirukkural which says, “The body does not need any medicine if you pay attention to what can be eaten and what must not be eaten.”

Kallanai was a dam constructed during Sanga Kalam, an ancient age of Tamil literature. This dam stands firm to this day in a fully functional fashion and deemed as the most ancient dam of the world.

Tamil people had known about wheel long back. The ancient potters of Tamil community made pots using wheel.

What we listed so far are only a few incredible scientific thoughts found in Tamil literature. In fact, ancient Tamil literature has oceanic information on various branches of science.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.