Iyarkai Velanmai in Tamil Katturai

இயற்கை வேளாண்மை

இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை இன்று மனித குலம் அதிகமாக உணர்வதனால் இது இன்று மிகப் பரவலாகப் பேசப்படும் தலைப்பாக உள்ளது. இயற்கை வேளாண்மை என்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய செயற்கையான உரங்கள், பயிர் ஊக்கிகள் மற்றும் பூச்சி மருந்துகள் இன்றி இயற்கையான முறையில் விவசாயம் செய்வதேயாகும். இந்தக் கட்டுரையில் இயற்கை வேளாண்மையைப் பற்றி சில தகவல்களைக் காண்போம்.

இயற்கை வேளாண்மை

கடந்த பல ஆண்டுகளாக உலகின் எல்லா நாடுகளிலும் ரசாயன உரங்கள் அதிக அளவில் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. விரைவாக அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு தேவைப்படும் அதிகப்படியான உணவு தானியங்களையும் காய்கறிகளையும்  மிக விரைவாகவும் மிக அதிகமான விளைச்சலுடனும் விளைவிக்க எண்ணிய மனித குலம் செயற்கையான ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகளை விவசாயத்தில் மிக அதிகமாகப் பயன்படுத்த தொடங்கி விட்டனர். இதன் விளைவு, வளரும் பயிர்கள் மற்றும் காய் கனிகள் சத்துக்கள் குறைந்து அவற்றை உண்போருக்கு பற்பல நோய்களை உருவாக்கும் ஒரு அபாயகரமான சூழ்நிலைதான். இதையும் தண்டி, இந்த ரசாயனப் பொருட்கள் சுற்றுப்புற சூழலை மாசடையச் செய்கின்றன. இதன் காரணமாக இயற்கை வேளாண்மை என்னும் கருத்தினை விவசாய வல்லுனர்களும் அறிவியலாளர்களும் முன் வைக்கின்றனர்.

இந்த உலகில் இயற்கை வேளாண்மையைப் பலரும் விரும்பி மேற்கொள்வதை நாம் காண்கிறோம். இந்த வரிசையில் மேற்கொள்ளப்படும் பற்பல முயற்சிகள் இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களையே விவசாயத்தில் வளர்ச்சி ஊக்கிகளாகவும், உரங்களாகவும், பூச்சி மருந்துகளாகவும் பயன்படுத்தி விவசாயத்தை நமது பாரம்பரிய முறைக்கு மாற்றிவருகின்றன.

இயற்கை விவசாயத்தில் மிக நல்ல மகசூல் கிடைப்பது ஒரு நல்ல செய்தி. செயற்கை உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகளால் விஷத்தன்மை அடைந்து பாழாய்ப் போகும் விலை நிலங்களை மீட்டெடுத்து அவற்றை சிறிது சிறிதாக ஊட்டம் கொண்ட நல்ல மண்ணாக மாற்றுவது ஒரு பெரிய சவாலான காரியம். ஆயினும் இதை நாம் செய்தோமென்றால் பின்வரும் காலத்தில் விவசாயம், சுற்றுப்புறம், மக்கள் உடல் நலம் இவை யாவும் மேம்படும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

Organic Farming Essay

Today, the mankind has been increasingly talking about organic farming due to its far reaching benefits and the awareness generated in these lines. Organic farming refers to the cultivation of crops using natural products for boosting up growth, manure and pest control. 

Over the past several years, artificial chemical fertilizers, pesticides and crop boosters have been increasingly employed for agriculture. In order to meet the growing needs of food for the exploding population, a lot of harmful fertilizers and pesticides have been used to shorten the period of crop maturation and increase the yield per acre. The result is that the crops thus grown have lesser nutritional value besides causing some deadly diseases and health problems in humans. Also, the chemical fertilizers are polluting the environment. Hence agriculture experts and scientists are now stressing more on organic farming.

Today a lot of farmers are actively pursuing organic farming. The efforts in these lines employ natural products for increasing the yield and reducing the infestation by pests. In this way, a lot of farmers are turning to the traditional methods of agriculture.

The good news is that organic farming gives an encouraging yield and positive results in conserving the environment, increasing the soil’s fertility and controlling the pests. The fields that are spoiled due to artificial farming needs to be rectified gradually and the natural fertility of the soil must be restored. This is indeed a huge task. However, if we dedicate our efforts to do this, the quality of lands, the crops grown, the environment and the health of people will all improve for sure.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.