Ariviyal Valarchi Katturai

Ariviyal Valarchi Katturai

அறிவியல் வளர்ச்சி கட்டுரை

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் நமது வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் நவீனமயமாக்கி முற்றிலுமாக மாற்றி விட்டது என்று கூறலாம். மனித வாழ்வின் எல்லாத்துறைகளையும் அறிவியல் புரட்டிப் போட்டு விட்டது. சில ஆண்டுகளுக்கு முன்னர் நாம் எதையெல்லாம் கற்பனையில் மட்டுமே கண்டோமோ அவையனைத்தும் இன்று நிஜத்தில் நடக்கின்றன என்றால் அது அறிவியலால்தான் சாத்தியமாயிற்று. இந்தக் கட்டுரையில் அறிவியலின் வளர்ச்சியைப் பற்றிக் காண்போம்.

அறிவியல் வளர்ச்சி கட்டுரை

இன்று நாம் உலகத்தின் ஒரு கோடியிலிருந்துகொண்டு மறு கோடியிலுள்ளோருடன் நேருக்கு நேர் பேசுவதுபோல் வீடியோ கான்பரன்சிங் வழியாக உரையாடவும் கற்கவும் கலந்துரையாடவும் செய்ய இயலுகிறது. நாம் தற்போது கோள்களுக்கு நமது விண்கலங்களை அனுப்புகிறோம். இந்த உலகின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் மிக விரைவில் நாம் பயணிக்க இயலுகிறது. நவீன தொலைத் தொடர்பு சாதனங்களும் பல்கிப் பெருகி விட்டன. அணுவைப் பிளந்து அதற்குள் பொதிந்திருக்கும் ஆற்றலை வெளிக் கொணர்ந்து மின்சாரம் தயாரிக்கிறோம் மற்றும் பல ஆக்க வேலைகளுக்கு இந்த சக்தியை உபயோகிக்கிறோம்.

விவசாயம் தழைக்க இன்று பல நவீன இயந்திரங்கள் வந்துவிட்டன. நிலத்தை உழுவது முதல், நாற்று நட்டல், களை எடுத்தல், உரமிடுதல், அறுவடை செய்தல், அரிசியைப் பிரித்தெடுத்தல் ஆகிய எல்லா விவசாய பணிகளுக்கும் இன்று இயந்திரங்கள் உள்ளன.

மின்சாதனங்கள், மோட்டார்கள், பலவகையான இயந்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், நவீன மயமான உணவு மற்றும் பலவிதமான சரக்குகள் தயாரிக்கும் இயந்திரங்கள் என்று அறிவியல் இன்று நவீனப் படுத்தாத துறையே இல்லை எனலாம்.

அறிவியல் வளர்ந்துவிட்டாலும் மனித நேயம், அன்பு, அஹிம்சை இவை வளரவில்லையெனில் அறிவியலின் வளர்ச்சியால் நமக்கு எந்த பயனும் இல்லை. மனித மாண்புகள் வளர்ந்து நாம் மனித குலம் நன்மை பெற இணைந்து செயல்படும்போதுதான் அறிவியலின் பயன்கள் நமக்கு முழுமையாகவும் ஆக்க பூர்வமாகவும் கிடைக்கும். அறிவியலின் படைப்புகளை ஆக்க பூர்வமாக மட்டுமே உபயோகிக்க உறுதி கொள்வோம். இந்த உலகில் மாந்தர் யாவரும் இன்பமான அமைதியான வாழ்வு வாழ்ந்திட நம்மாலானதை செய்வோம்.

Development of Science Essay In Tamil

Science and technology have today transformed every sphere of human activity. It has in fact revolutionized every human activity. What we could only dream a few years ago are happening in reality today thanks to the developments in science. In this essay, let us look at some of the scientific developments we see around us. 

Today we can interact with any person or persons in any corner of the world like we are interacting face to face in person. Video conferencing has made it possible to learn, meet or interact in small or big groups in real time. We are sending rockets to space and planets. We are able to travel to any corner of the world today in a very short time. Modern communication gadgets have also proliferated today. We are splitting atoms and releasing the energy contained in them. With the atomic energy we are producing electricity as well as use this energy for several applications.

Today agriculture has been revolutionized with advanced machinery. Right from tilling the fields, we have advanced machines to sow seeds, apply manure, remove weeds, harvest, and extract rice.

There is no field that science has not modernized today. Electrical and electronic gadgets, a variety of machinery, manufacturing machines, food processing machinery and many others we find around us are the products of science.

Though science has developed, the developments are of little use to us if we do not develop love, humanity and non-violence. The benefits of science can be realized in full and in a constructive way only when we cultivate the human values and share the benefits with all humans equally. Let us resolve to use the benefits of science only for constructive activities. We must do whatever possible to us for the peaceful and happy life of our fellow humans.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.