Annaiyar Dhinam Katturai In Tamil

Annaiyar Dhinam Katturai In Tamil

அன்னையர் தினம் கட்டுரை

நமது அன்னை நாம் இந்த உலகிற்கு வர முழுமுதற்  காரணம். நம்மைத் தனது கருவில் பத்து மாதம் சுமந்து நாம் நலமுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ அரும்பெரும் தியாகங்கள் பலவற்றை செய்து நம்மை ஆளாக்கும் தாயைக் கொண்டாடும் தினமே அன்னையர் தினம். இந்தக் கட்டுரையில் அன்னையர் தினத்தைப் பற்றியும் அதன் முக்கியத்துவதை பற்றியும் காண்போம்.

அன்னையர் தினம் கட்டுரை

தாயிற்சிறந்த கோவிலும் இல்லை என்பது தமிழில் நாம் காணும் முதுமொழி. நமது வாழ்வில் நமது தாய் நாம் மதித்து, போற்றி வணங்கி சேவை செய்ய வேண்டிய ஒரு பாத்திரமாகும். ஒரு பெண் தனது வாழ்வில் மகள், சகோதரி, தோழி, மனைவி என்று பற்பல பாத்திரங்களில் வலம்வந்தாலும் ‘தாய்’ அல்லது ‘அன்னை’ என்ற பாத்திரம் ஒரு மகத்தான பாத்திரமாகும். தாயின் அரவணைப்பில் ஒரு குழந்தை நலமுடனும் வளமுடனும் வளருகிறது. நமது வாழ்வில் நமது தாயின் பங்கு அளப்பரியது. அதனால் நாம் நமது தாயைப் போற்றி வணங்குவது இன்றியமையாதது.

அனு தினமும் நாம் நமது அன்னையை வணங்க வேண்டும் என்றாலும் தாய்மையைக் கொண்டாட வருடத்தில் ஒரு நாளை ஒதுக்குவது சிறப்பு என்று கருதி அன்னா மரியா ரிவிஸ் ஜார்விஸ் என்ற பெண் சமூக சேவகி 1909 ல் அன்னையர் தினத்தை தொடங்கினார். இவரது அயராத முயற்சியால் அன்னையர் தினம் உலகெங்கிலும் கொண்டாடப்பட்டு வந்தது.

நாம் அன்னையர் தினத்தன்று மட்டும் நமது அன்னைக்கு வணக்கம் செய்து பரிசுகளை வழங்கினால் போதாது. தாய் நமக்கு முதற்கடவுள். தாயின் வழிகாட்டுதலை நாம் ஏற்று அவரது வார்த்தைகளைத் தட்டாமல் நடப்பதே நாம் நமது தாய்மீது கொண்ட பக்திக்கு முதல் அடையாளம். நமது தாய் நம்மை சிறு வயதில் எப்படிப் பேணி வளர்த்தாரோ அவ்வாறு அவரது முதிய வயதில் நாம் அவரைப் பேணிப் பாதுகாத்தல்தான் நாம் அவருக்கு செலுத்தும் உண்மையான நன்றிக்கடன்.

Mothers’ Day Essay

Our mother is the primary cause for our arrival on this earth. She has carried us in her womb for about ten months and has given us birth. Upon our birth, she has done a lot of sacrifices so that we grow up happily and healthily. Mothers’ Day is the day when we remember the sacrifices of our mother and celebrate the motherhood. Let us know something about Mothers’ Day and the importance of Mothers’ Day in this essay.

In Tamil, a famous proverb says, “There is no temple better than our own mother”. Mother is a character that has to be revered, praised and worshipped in our lives. A woman plays several roles in her life as a sister, daughter, friend, wife and others. However, the role of Mother is something that is so wonderful for a woman. A baby is nurtured to wellness and happiness through the loving care of its mother. Hence it is very important that we revere and adore our mothers in a fitting way.

Though it is necessary to respect and regard our mothers everyday, Anna Maria Rivis Jorvis of America thought is but appropriate to set apart a day in a year to celebrate Mothers’ day. Due to her persistent efforts from 1909, Mothers’ Day came to be celebrated worldwide.

It is not enough that we revere our mother on Mothers’ Day and gift her some presents on this day. Our mother is verily our god. We must accept the guidance of our mothers and follow her advice which is a mark of respect that we show her. The most fitting way to express our gratitude to our mother is to take care of her in her old age as she cared for us during our childhood.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.